சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன்…
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் 'பெனால்டி ஷூட் அவுட்டில்' பெல்ஜியத்தை வீழ்த்தியது.
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில் மொத்தம் 24 அணி கள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த 6 அணிகளுடன், 2வது இடம் பிடித்த 'டாப்-2' அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
காலிறுதி போட்டிகள் நேற்று சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில்,. 'பி' பிரிவில் முதலிடம் பெற்ற இந்தியா, 'டி' பிரி வில் இரண்டாவது இடம் பெற்ற 'ரெட் லயன்ஸ்' என அழைக்கப்படும், பெல்ஜியத்தை எதிர் கொண்டது.
4-3 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்குமுன்னேறியது. டிச. 7ல் சென்னையில் நடக்க உள்ள அரையிறுதியில் இந்தியா-ஜெர்மனி (மாலை 5:30 மணி), ஸ்பெயின்-அர்ஜென்டினா (இரவு 8:00 மணி) மோத உள்ளன.
0
Leave a Reply